நெல்லையில் அதிமுக சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 102-வது பிறந்தநாள் விழா பொதுக் கூட்டம் நெல்லை டவுண் வாகையடி முனையில் நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் கணேசராஜா தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசுகையில் கொள்கையும் கோட்பாடும் இல்லாத கட்சி திமுக. கொடநாடு விவகாரத்தில் கூலிப்படைக்கு பின்புலமாக இருப்பது திமுகதான் . திமுக அந்த கூலிப்படையை ஜாமீனில் எடுப்பது உள்ளிட்ட உதவிகளை செய்து வருகின்றனர் கொடநாடு விவகாரத்தில் தொடர்புடையவர்கள் பற்றி விரிவான விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் . தமிழக அரசின் சாதனைகளை மனதில் வைத்து வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவிற்கு வாக்களிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
DES: The backdrop for the Kodanad mercenary DMK